அவசியம் ஏற்பட்டால் ரஜினியும், நானும் இணைவோம்-கமல்

சென்னை, நவம்பர்-19

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  இலங்கையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே அனைவருக்குமான அதிபராக செயல்பட வேண்டும். மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் அனைத்து மக்களுக்காகவும் செயல்படவேண்டும்.  44 ஆண்டுகளாக ரஜினியுடன் சினிமாவில் பயணித்துள்ளேன்.

தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலை வந்தால், கண்டிப்பாக பயணிப்போம். கொள்கைகள் பற்றியெல்லாம் இணையும்போது பேசிக்கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என ரஜினி கூறியது விமர்சனம் இல்லை, நிதர்சனம், உண்மை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *