தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் – ராணுவம் எச்சரிக்கை

தென் இந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.

டெல்லி, செப்-09

குஜராத் மாநில கடல்பகுதியில் உள்ள சர் கிரீக் என்ற சிறுகுடாவில் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆளில்லாத இரு இயந்திரப் படகுகள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய ராணுவத்தின் தென்னிந்தியா பிரிவுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி இன்று எச்சரித்துள்ளார். ’சமீபத்தில் சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட படகுகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எங்களுக்கு உளவுத்தகவல் கிடைத்துள்ளது. இதை முன்எச்சரிக்கையுடன் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என எஸ்.கே.சைனி தெரிவித்தார். மேலும் பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிகுண்டு சம்பவங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, தற்போது, தென் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கலாம் என வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *