சோனியா,ராகுல் பாதுகாப்பு விவகாரம் : மக்களவையிலிருந்து காங்., திமுக வெளிநடப்பு

 

டெல்லி.நவம்பர்.19

சோனியா காந்தி ,ராகுல்காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு எதிர்ப்பு  தெரிவித்து மக்களவையிலிருந்து,காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட  முக்கியத் தலைவர்களுக்கு அளிக்கப்படும் மத்திய  அரசின் எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அண்மையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.இந்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று மக்களவையில், காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி,  சோனியா காந்தி பாதுகாப்பு குறித்த பிரச்சனையை எழுப்பி, அவையில் விவாதிக்க வேண்டுமென்று கோரினார். ஆனால், கேள்வி நேரத்தில் இது பற்றி விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் கூறினார். மக்களவைத் தலைவரும், காங்கிரஸ் கோரிக்கையை ஏற்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.அப்போது பாஜக அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதை  நிறுத்த வேண்டும்,சர்வாதிகார போக்கை  கைவிட வேண்டும்  முழக்கங்கள் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.பின்னர் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *