ரஜினி சொல்லும் அதிசயங்கள் நடக்க வாய்ப்பில்லை-ஜெயக்குமார்

சென்னை, நவம்பர்-19

சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி.தியாகராயர் கலை அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் நலதிட்ட உதவிகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

ரஜினி, கமல், விஜய் எந்த நடிகராக இருந்தாலும், நடிகர்களைத் தவிர யாராக இருந்தாலும் அரியணை ஏற வேண்டும் என்ற எண்ணம் ஜனநாயகமானது. ஆனால் ஒரு நல்ல அரசை விமர்சனம் செய்யும் பொழுது கட்சி மீதும் கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அதை வீணாக அவர்களைத்தான் காயப்படுத்தும். இதற்கு தகுந்த பதிலடி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். பந்தை எங்கள் மீது வீச பார்த்தால் நாங்கள் அவர்கள் மீது வீசுவோம்.

எத்தனையோ இடர்பாடுகள், ஏளனங்கள், கேளிகள், கண்டனங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நாங்கள் தாண்டி முன்னோடியாக செல்கிறோம். 2021-ல் அதிமுக ஆட்சி தான் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலிலும், நல்லாட்சி என்ற அதிசயம் நடைபெறுமா என்றால் அது நடைபெறும் ரஜினி கூறுவது போல் வேறு எந்த ஒரு அதிசயமும் நடைபெற வாய்ப்பில்லை.

தொப்புள் கொடி உறவாக இருக்கின்ற இலங்கை தமிழர்கள் நேசிக்கும் ஒரு இயக்கம் அதிமுக. திமுக ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம். இனப்படுகொலைக்கு காரணமே திமுக தான். கருத்தை பொருத்தமட்டில் இரட்டை வேடம் போடுபவர்கள் இவர்கள்தான் திமுக.  எங்களுக்கு இருக்கும் ஒரே கவலை அங்குள்ள தமிழர்கள் நியாயமான, பாதுகாப்பாக அனைவரும் போல் எல்லா உரிமையும் பெற்று ஒரு குடிமகனாக இருக்க வேண்டும். புதிய அரசு அந்த நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *