திமுக விருப்ப மனு விநியோக கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, நவம்பர்-19

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கால அவகாசத்தை வரும் 27ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்பமனுக்களை பெற்று, போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மைப் பற்றிய விவரங்களை அந்தப் படிவத்தில் நாளைக்குள் உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டும் என திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்று வரும் 27ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை மாவட்ட திமுக அலுவலகங்கள் அல்லது தலைமையகத்தில் பெற்று நிரப்பி, உரிய கட்டணத்துடன் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *