புதிய மாவட்டங்களை நேரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி!!!

சென்னை, நவம்பர்-19

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 5 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்க உள்ளார். தொடங்கி வைப்பதற்கான நாள் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், 22ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வரும் 27ஆம் தேதி காலை 10.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். திருப்பத்தூர் மாவட்டத்தை 28-ம் தேதி காலை 10.30 மணிக்கும், 12.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தை 29ஆம் தேதி நண்பகல் 12 15 மணிக்கு தொடங்கி வைக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *