சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சியா?: பிடிகொடுக்காத சரத்பவார்!!!

டெல்லி, நவம்பர்-18

மராட்டியத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான கேள்விக்கு சரத்பவார் பிடி கொடுக்காமல் பேசியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்க வந்த சரத் பவார் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தேசியவாத காங். காங்கிரஸ், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை எந்த கட்டத்தில் இருக்கிறது என கேட்டனர். அதற்கு சரத் பவார் வியப்பு தெரிவிக்கும் வகையில், “அப்படியா, பேச்சு நடத்துகிறார்களா”? எனக் கேட்டார்.

அதற்கு நிருபர்கள், என்சிபியுடன் சிவசேனா பேச்சு நடத்துவது உண்மையில்லையா என்று கேட்டனர், அதற்கு சரத் பவார், ” சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

சரத் பவாரிடம் மீண்டும் நிருபர்கள், சிவசேனா-என்சிபியுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று கூறிவருகிறார்களே என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் மிகவும் கிண்டலாக, “அப்படியா” எனக் கேட்டவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *