நாட்டின் முன்னேற்றத்தில் மாநிலங்களவையின் பங்கு அவசியம்-பிரதமர் மோடி உரை!!!

டெல்லி, நவம்பர்-18

மாநிலங்களவையின் 250ஆவது அமர்வு நடைபெறுவதை முன்னிட்டு பிற்பகலில் அங்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியல் பரிணாம வளர்ச்சியில் மாநிலங்களவையின் பங்கு மகத்தானது. பல்வேறு துறை சார்ந்து நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மாநிலங்களவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. இந்த அவை நிரந்தரமானது. பன்முகத்தன்மை கொண்டது, மதிப்பு மிக்கது. கூட்டாச்சி என்பதே இந்தியாவின் ஆன்மா. இதன் பன்முகத்தன்மையே இந்த அவையின் பலமாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்த சபையில் காண முடியும். இந்த சபை பல்வேறு பெருமைகள் கொண்டது. கருத்து ஒற்றுமையுடன் முத்தலாக் தடை, ஜி.எஸ்.டி. மசோதா, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு பெருமையான மசோதாக்கள் நிறைவேற்றபட்டுள்ளன. பெண்கள் அதிகாரம், நீதியை நிலை நாட்டல் என இந்த அவை திடமான முடிவுகளை எடுத்துள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்ட பலரும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முன்மாதிரியாக விளங்கினர்.

தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் நாடாளுமன்ற விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பவை என்றும், அக்கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இரு கட்சிகளிடம் இருந்து பாஜக உள்ளிட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *