வேலூர் தொகுதி எம்.பி.யாக கதிர் ஆனந்த் பதவியேற்பு

டெல்லி, நவம்பர்-18

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்த் முறைப்படி தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அருண் ஜெட்லி, ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ் குப்தா உட்பட மக்களவையில் 10 பேருக்கும், மாநிலங்களவையில் 5 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், வரும் டிசம்பர் 13-ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-ஆவது மக்களவையின் 2-ஆவது கூட்டத்தொடராகும்.  வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மக்களவையில் எம்பி.யாக பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் பதவியேற்றதன் மூலம், மக்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *