அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை

தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில் 2 பெண்கள் உள்பட 6 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஐதராபாத், செப்-09

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக்கொண்டார் . அதே நாளில்தான் தெலுங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெற்றது. முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் உட்பட ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்ற ஆறு அமைச்சர்களில் இரண்டு பெண்களும் தெலுங்கானாவின் முதல் பெண் அமைச்சர்களாகிறார்கள். ஐதராபாத் நகரில் உள்ள ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ், டி.ஹரிஷ் ராவ், சபிதா இந்திரா ரெட்டி, சத்தியவதி ரத்தோர், ஜி.கமலாக்கர் மற்றும் பி.அஜய் குமார் ஆகியோர் அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முன்னிலையில் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *