லேடி சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள்-ஹாப்பி ஃப்ர்த்டே நயன்!!!

சென்னை, நவம்பர்-18

இன்று நடிகை நயன்தாரா தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தன்னுடைய காதலரும், இயக்குநருமான விக்கினேஷ் சிவனுடன் நயன்தாரா அமெரிக்காவில் கொண்டாடி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை விக்கினேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாது, நயன்தாராவின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#HBDLadySuperStarNayanthara #HappyBirthdayNayanthara போன்ற ஹேஷ்டாக்குகளை பயன்படுத்தி ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் சினிமா மாறிக்கொண்டே போகிறது. விதவிதமான கதைகளத்தில் நாம் எத்தனையோ திரைப்படங்களைப் பார்க்கிறோம். ஒரு சில கதாபாத்திரங்களையும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. ஏனெனில் அந்த கதாபாத்திரங்கள் நம் வாழ்க்கையோடு ஒன்றியிருக்கும்.

அப்படியான ஒரு நடிகை தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் எத்தனையோ சிறந்த நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவுக்கு மட்டும் தான் அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   இதற்கு, காரணம் அவரது திரை வாழ்க்கை மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையும் தான்.

கேரள மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா 1984-ம் ஆண்டு பிறந்தார். 2003-ம் ஆண்டு தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சினிமாவுக்கு அறிமுகமான நயன்தாரா எந்த ஒரு செயலையும் விரும்பி செய்யக்கூடியவர். அதனாலேயே அடுத்த அடுத்த பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின் பிரபுதேவாவுடன் உறவிலிருந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்துக் கொண்டு இல்வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். அந்த உறவும் திருமணத்தில் கைகூடாமல், முறிந்துப் போக துவண்டு விடாமல், ராஜா ராணி திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். முன்பை விட மிக அதிகமான படங்களில் நடித்து, தனது மறு முகத்தைக் காட்டினார்.

எத்தனை பிரச்னைகளை சந்தித்தாலும், அதை துணிச்சலுடன் எதிர்கொண்டு, தனது படங்களின் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நயன், பல பெண்களுக்கு முன்னுதாரணம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *