தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத்தொடர், மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல்

டெல்லி, நவம்பர்-18

மத்தியில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சியில் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலங்களை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.

இந்த நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா, ஜெகநாத் மிஷ்ரா, சுக்தேவ் சிங் லிப்ரா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா விலகிய பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *