தெலுங்கானா ஆளுனராக தமிழிசை பதவியேற்பு

தெலுங்கானா மாநில ஆளுனராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார்.

ஐதராபாத், செப்-09

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை ஐதராபாத் சென்ற தமிழிசையை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்க மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பதவியேற்றதும் மேடையின் கீழே இருந்த தனது தந்தை குமரி அனந்தன், தாய் ஆகியோரிடம் காலில் விழுந்து தமிழிசை ஆசீர்வாதம் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *