ஹூஸ்டன் பல்கலை. தமிழ் இருக்கைக்கு ஓ.பி.எஸ். நிதி அறிவிப்பு

ஹூஸ்டன், நவம்பர்-16

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தனது சொந்த நிதியில் இருந்து பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள ஓபிஎஸ் இந்திய தூதரக அலுவலகத்தில், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்கான இயக்குநர்கள் குழுவை சந்தித்து பேசினார்.

அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக தெரிவித்தார். அதன்பின்னர், அமெரிக்க வாழ் இந்திய முதலீட்டாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *