சபரிமலைக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சபரிமலை, நவம்பர்-16

சபரிமலைக்கு வந்த ஆந்திராவை சேர்ந்த, 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் 10 பேரை, பம்பையில் தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். முந்தைய தீர்ப்பிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். இதனால், இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு சபரிமலை கோவிலுக்கு வருவோம் என சில பெண் சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள், சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

சபரிமலை வழக்கு, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு மண்டல பூஜையின் போது, 10 முதல், 50 வயது வரையிலான பெண்களை, சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என, கேரள அரசுக்கு, அம்மாநில அட்வகேட் ஜெனரல் ஆலோசனை வழங்கி உள்ளார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 10 பேர் சபரிமலை செல்வதிற்காக பம்பை வரை வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணை நடத்தினர். அதில், அவர்களின் வயது 50க்கும் கீழ் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்துக்கூறிய போலீசார், அவர்களை திருப்பி அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *