இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்

கொழும்பு, நவம்பர்-16

இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  இத்தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்து 96 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கையின் வரலாற்றிலேயே முதன் முறையாக 35 வேட்பாளர்கள் களமிறங்குவதால் அவர்களுக்காக நீண்ட வாக்குச் சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும்   ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்  கோத்தபய ராஜபக்சவுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.

காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 12 ஆயிரத்து 815 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.   தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அனுமதித்துள்ள அடையாள அட்டைகளை காட்டி, வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் சிறப்பு பிரிவு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று லட்சம் அரச அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அதேசமயம் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம், உட்பட சர்வதேச இயக்கங்களும், பல நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும்   இலங்கையின் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *