ப.சிதம்பரம் போல ஸ்டாலினை கைது செய்ய முடியாது – திருமா
புதுச்கோட்டை செப்டம்பர் 9 :
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்ய முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழிசைக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் தெலுங்கானா ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை. அரசியலில் துடிப்புடன் செயல்படும் அவருக்கு மத்திய அமைச்சர் போன்ற பதவியை வழங்கி இருக்கலாம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊர் திரும்பிய பிறகு அவரது அறிக்கையை பொறுத்தே விமர்சனம் செய்ய முடியும். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைப் போன்று மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பாஜக தலைவர்கள் கூறிவருவது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால், அந்த ஆசை நிறைவேறாது இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.