சென்னைக்கு நாளை திரும்புகிறார் எடப்பாடியார்

சென்னை செப்டம்பர் 9.

இங்கிலாந்து, அமெரிக்கா,துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடியார் நாளை சென்னைக்கு திரும்புகிறார்.

தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் நகரம் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக கடந்த மாதம் 28-ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி கடந்த 1-ந் தேதி அமெரிக்கா புறப்பட்டார். பபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணையில் நாட்டு இன மாடுகள் வளர்ப்பு, மரபணு பராமரிப்பதில் மேம்பட்ட தொழில்நுட்பம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் தமிழ் தொழில் அதிபர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 80 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை பெறுவதற்காக ‘யாதும் ஊரே’ என்ற பிரத்யேக திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். துபாயில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *