புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம்!!!

சென்னை, நவம்பர்-15

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு காவல்துறை எஸ்.பிக்களை நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி விஜயகுமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சியில், காவல்துறை துணை ஆணையராக இருந்த மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகுனாசிங் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாகவும், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக கண்ணன் உள்ளிட்ட 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *