மராட்டியத்தில் 25 ஆண்டுக்கு சிவசேனா ஆட்சி தான்: ராவத் நம்பிக்கை

மும்பை, நவம்பர்-15

மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா தலைமையிலான ஆட்சி தான் நடைபெறும் என சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா ஆலோசனை நடத்தி வருகிறது. நாளை 3 கட்சிகளும் ஆளுநரை சந்தித்து, எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளன.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத், வெறும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல அடுத்த 25 ஆண்டுகளுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி தான் மகாராஷ்டிராவில் நடக்கும் என்றார்.

மக்களின் விருப்பத்தின் பேரிலேயே குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையிலேயே கூட்டணி குறித்து காங்., மற்றும் தேசியவாத காங்., இடையே பேசப்பட்டது. தனிக்கட்சி ஆட்சியோ அல்லது கூட்டணி ஆட்சியோ, எதுவாக இருந்தாலும் அரசு நடப்பது தான் முக்கியது. வறட்சி, காலம் தவறிய மழை உள்ளிட்ட சமயங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படும். எங்களுடன் வந்து இணைந்திருப்பவர்கள் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள். அவர்களின் அனுபவம் எங்களுக்கு பயன்பட உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாவிடம் முதல்வர் பதவி இருக்க வேண்டும் என விரும்புகிறோம். யாராவது அவர்களின் திறமையை காட்டினால் தலைமை பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க சிவசேனா தயங்காது. கடந்த 50 ஆண்டுகளாக சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவுடன் தொடர்பு உள்ளது என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *