இரட்டை சதம் அடித்து மயங்க் அகர்வால் அசத்தல்

இந்தூர், நவம்பர்-14

இந்தூரில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடர்ந்தது. 43 ரன்களுடன் களத்தில் இருந்த புஜாரா, அரைசதம் அடித்த நிலையில், 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து புஜாராவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக கோலி 2 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், அபு ஜாயித் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார்.

பின்னர் 4ஆவது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலுடன் ரஹானே கை கோர்த்தார். இருவரும் நிலைமையை உணர்ந்து விளையாடினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. மயங்க் அகர்வால் 303 பந்துகளில் 25 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடித்து தனது 4 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதையடுத்து ரஹானேயும், 105 பந்துகளில் அரை சதம் அடித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *