வெற்றிடத்தை எடப்பாடியார் நிரப்பிவிட்டார்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை, நவம்பர்-15

கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விண்ணப்ப மனுக்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், வார்டு கவுன்சிலர்களுக்கான விருப்ப மனுக்களை அதிமுகவினர் ஆர்வமுடன் பெற்று வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 50 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு கோவை நகரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் போல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடத்தை எடப்பாடியார் நிரப்பிவிட்டார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *