19-ல் பிகில் படத்தின் டீசர் வெளியீடு

செப்டம்பர்-7

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வருகிற 19-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் பிகில். பெண்கள் கால்ப்பந்து விளையாடுவதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பிகில் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கும் விதமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விஜயோடு கதாநாயகியாக கைகோர்த்துள்ளார். தீபாவளிக்கு படம் திரைக்கு வரவுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முழுவதும் படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்களை வருகிற 19-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *