நீட் சர்ச்சை தான் விஜய் 64-ன் கதையா?

சென்னை, நவம்பர்-14

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கதை கசிந்து வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சமீப காலமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு படம் நடித்து வருகிறார். கத்தி திரைப்படத்தில் தண்ணீர் பிரச்சனை மற்றும், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கூறியிருந்தார். அதன்பிறகு, மெர்சல் படத்தில் மருத்துவ துறை முறைகேடுள் மற்றும் ஜி.எஸ்.டி. பற்றியும் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து சர்கார் திரைப்படத்திலும் முழுக்க முழுக்க அரசியல் பற்றியே பேசியிருந்தார்.

தற்போது, நடிகர் விஜர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதில், விஜய் ஐ.டி. கார்டு அணிந்திருப்பதால், பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? அல்லது மாணவர் போன்று நடிக்கிறாரா? என ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

இந்த நிலையில், அந்த படத்தின் கதையும் கசிந்துள்ளது. தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, நீட் தேர்வு குறித்தும், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை மையமாக கொண்டு தான் விஜய்யின் 64-வது படம் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *