150 ரன்களில் சுருண்ட வங்கதேச அணி!!!

இந்தூர், நவம்பர்-14

இந்தூரில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்னில் ஆட்டமிழந்தது.

இந்தூரில் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்கத்தில் இருந்தே உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் வகையில் பந்து வீசினார்கள். இதனால், பந்துகளைச் சமாளித்து விளையாட இஸ்லாம், இம்ருல் இருவரும் சிரமப்பட்டனர். 12 ரன்களில் வங்கதேசம் இரண்டு விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து, அஸ்வின் வீசிய ஓவரில் மோமினுல் ஹக் நேர் நேர் தேமா பந்தில் 37 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வங்கதேச பேட்டிங் ஆட்டம் கண்டது. அடுத்துவந்த மகமதுல்லா 10 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஒரு கட்டத்தில் 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி, அடுத்த 10 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அதிலும் 140 ரன்களில் வங்கதேசம் 6, 7, 8-வது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் வங்கதேச அணி சுருண்டது.

திலும் 140 ரன்களில் வங்கதேசம் 6, 7, 8-வது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் வங்கதேச அணி சுருண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *