நாளை முதல் தேமுதிக விருப்ப மனு விநியோகம்!!!

சென்னை, நவம்பர்-14

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் அதிமுக களமிறங்குகிறது. உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு விநியோகிக்கும் அறிவிப்பை அதிமுக, திமுக கட்சிகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 15.11.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேயர் பதவிக்கு ரூ.15,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.4,000, நகராட்சி தலைவர் ரூ.7,000, நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1,500, பேரூராட்சி தலைவர் ரூ.4,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1,000 ஆகும். மேலும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரூ.4,000, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரூ.2,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *