தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்-மு.க.அழகிரி

சென்னை, நவம்பர்-14

தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது அதை ரஜினி தான் நிரப்புவார் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி, தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு வெற்றிடம் உள்ளது என கூறினார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் வெற்றிடத்தை முதல்வர் இபிஎஸ் நிரப்பிவிட்டார் எனவும், திமுக பொருளாளர் துரைமுருகன், வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் எனவும் மாறி மாறி கூறி வந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து மு.க.அழகிரியிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ரஜினி கூறியது போல் தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மை தான். ரஜினி வருவார், அந்த வெற்றிடத்தை நிரப்புவார் எனக்கூறினார். மு.க. அழகிரியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *