அடுத்த ஆண்டு சந்திராயன் 3: இஸ்ரோ திட்டம்

சென்னை, நவம்பர்-14

சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பர் மாதம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் அனுப்பியது. இதில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் அதில் இருக்கும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சந்திரயான்- 3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதனை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும், சந்திரயான்-3 மூலம் அனுப்பப்படும் லேண்டர் வலுவானதாகவும், எந்த சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிலவை சுற்றி ஆய்வு செய்து வரும் சந்திரயான்- 2 விண்கலம் நிலவின் புகைப்படங்களை அவ்வபோது அனுப்பி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலம் எடுத்த, நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளங்களின் 3டி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

டெரைய்ன் மேப்பிங் கேமரா 2 முழுமையான நிலவின் மேற்பரப்பின் டிஜிட்டல் மேம்பட்ட மாதிரியை தயாரிப்பதற்காக, 100 கி.மீ., சுற்றுப்பாதையில் இருந்து 5 மீ பரப்பை மும்டங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை வழங்கியுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *