சென்னை மாநகராட்சி மாணவ சுகாதார தூதுவர்களுக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு

சென்னை, நவம்பர்-14

சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு விளம்பரத்தில் சுகாதார தூதுவர்களாக பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்பதை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளிமாணவ மாணவிகள் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டு பன்முக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  

இதில் சசிகலா, நவ்யஸ்ரீ, நந்திதா காந்தி ஆகிய மாணவிகள் பங்கேற்ற, என் வீதி உன் கழிப்பறையா?, வீதிகளில் இருக்கிற குப்பை வீடுகளில் இருந்து போனதுதானே, குப்பைக்கும் கொசுக்களுக்கும் குட்பைசொல்வோம் போன்ற சுகாதார விளம்பரங்கள், முன்னணி தொலைக்காட்சிகள், நாளேடுகள், வாரஇதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வெளியானது. மேலும், மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஆட்டோக்கள் மூலம் மாணவிகளின் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது

பொது மக்களின் கவனத்தை ஈர்த்த மாணவிகளின் சுகாதார விழிப்புணர்வு விளம்பரங்கள் சமூக ஊடகங்களிலும் வைரலானது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சசிகலா, நவ்யஸ்ரீ, நந்திதா காந்தி ஆகிய மூவரையும்   பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *