மக்களை நாய் என்று கூறிய பிரபல நடிகை

செப்டம்பர்-7

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக சென்றிருக்கும் பிரபல நடிகை சாக்‌ஷி வெளியில் இருக்கும் மக்கள் அனைவரும் நாய் என கூறியுள்ளார். இந்த கருத்து அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மற்ற மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், 74 –வது நாளில் ஷெரினுக்கும், வனிதாவுக்கும் சண்டை வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஷெரின் தனியாக அமர்ந்து புலம்பி அழுதுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிய சாக்‌ஷி நாய்கள் ரோட்ல குரைக்கும். அத பத்தி நீ கவலைப்படுவியா? நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைக் கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் சாக்‌ஷியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சாக்‌ஷியின் இந்த கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *