அஜித்தின் விஸ்வாசம் ட்விட்டர் டிரெண்டிங்கில் புதிய சாதனை

சென்னை, நவம்பர்-13

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ட்விட்டர் டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது.

விவேகம், வேதாளம், வீரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியில் உருவான படம் விஸ்வாசம். அஜித், நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியானது. இந்நிலையில் 2019-ம் ஆண்டில் அதிகம் பிரபலமான ஹேஷ்டேக்குகளில் விஸ்வாசம் படத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ட்விட்டர் மார்க்கெட்டிங் இந்தியாவின் #Launch2020 இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ட்விட்டர் உலக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் மகேஷ் பாபுவின் மகரிஷி ஆகியவை ட்விட்டரில் 2019ன் சிறந்த செல்வாக்கு மிக்க ஹேஷ்டேக்குகளாக இருந்ததாக பட்டியலிட்டு உள்ளனர். 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர், “இந்த ட்வீட்டை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. ஆனால் இது இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஹேஷ்டேக்குகளில்  ஒன்றுதான். 2019-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *