பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரேசிலியா, நவம்பர்-13

பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றடைந்தார். பிரேசிலியா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.

பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி பிரேசிலியா நகருக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

இந்த மாநாட்டில் நரேந்திர மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும். எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

தமது பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *