விஜய்யின் ‘தளபதி 65’ இயக்குநர் இவரா? உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை, நவம்பர்-13

அட்லியுடனான பிகில் படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் மாநகரம், கைதி வெற்றிப் படங்களின் இயக்குநரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் சென்னை டெல்லி என தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வருகிற ஜனவரி 1 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், விஜய்யின் 65வது படம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவெனில், ‘தடையறத்தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி விஜய்யின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 64 படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய்யிடம் மகிழ் திருமேனி அடுத்த படத்துக்கான கதையை கூறியுள்ளதாகவும், அதற்கு விஜய் ஓகே சொல்லியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கமர்ஷியல் கதைகளை கொண்ட படத்தில் நடித்து வந்த விஜய், தற்போது இளம் இயக்குநர்களின் படைப்பில் நடிக்க முடிவெடுத்திருப்பது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது

‘விஜய் 64’ படம் ஏப்ரல் 14ல் வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளதால், அந்தப் படம் ரிலீஸானதும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விஜய் 65 படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் 65 படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *