ஹெச்.ராஜா-மு.க.அழகிரி சந்திப்பு

காரைக்குடி, நவம்பர்-13

பா.ஜ.க.வின் தேசிய செயலர் ஹெச்.ராஜாவை முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்து பேசினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்து பேசினார். விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹெச்.ராஜா-மு.க.அழகிரி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி, இந்த வாரத்தில் ஹெச்.ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. என்னால் அந்த திருமணத்திற்கு வர இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து செல்கின்றேன். என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *