அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பிரதமர் மோடியை அழைத்து வருவோம்-R.B.உதயகுமார்

மதுரை, நவம்பர்-13

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் தொடர் ஜோதி நடைபயணத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த தொடர் நடைபயணத்தின் மூலம் அதிமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து திமுகவின் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதே எங்களின் முதல் நோக்கம். நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து முதலமைச்சர் கூறிய கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசனின் நிலை தான் வரும் என கூறியது உண்மைதான்.

அந்த கருத்தை நான் வழிமொழிகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தான் 100% வெற்றி பெறும். புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்கு பிரதமர் மோடியை அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *