ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை நீட்டிப்பு

டெல்லி, நவம்பர்-13

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட நவம்பர்.22-ம் தேதிவரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தத் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி மீண்டும் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரி இன்பதுரை தாக்கல் செய்த வழக்கில், முதலில் உச்சநீதிமன்றம் அக்டோபர்-23.ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 13 ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நவம்பர்-22-ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *