ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

காபூல், நவம்பர்-13

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமானது தலைநகர் காபூலில் உள்ள கசாபா பகுதியில் அமைந்துள்ளது. காலை நேரம் என்பதால் பரபரப்பாக இயங்கி வந்த இப்பகுதி சாலையில், திடீரென கார் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சக்திவாய்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதலால் அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அருகில் இருந்த கட்டிடங்கள், கடைகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி,
கார் குண்டுவெடிப்பில் முதற்கட்ட தகவலின்படி, 7 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும், என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *