ஊரக வளர்ச்சி துறை திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் S.P.வேலுமணி ஆய்வு

சென்னை, நவம்பர்-12

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தும் மாநில அரசின் நிதி ரூ.500 கோடியும் அவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நிதியாக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடபட்டது.

மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், குடியிருப்பு திட்டங்களான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுதல் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர சாலை பணிகள் திட்டம் போன்ற பல்வேறு பணிகளில் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் 100% எரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், இது தொடர்பாக வரும் புகார்கள் மீதும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக 1,25,14 கிராம ஊராட்சிகள் அமைப்பினால் உலக இளைஞர் விளையாட்டு மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பழனிசாமி மற்றும் கூடுதல் இயக்குனர்கள் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *