ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். வருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழிசை சவுந்தரராஜன் அம்மாநில ஆளுநராக பதவியேற்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழிசைக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் விமானம் மூலம் ஹைதரபாத் செல்கின்றனர். முன்னதாக ஆளுநர் பதவி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே குடியரசு தலைவரின் ஆணையை தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகை ஆணையர் தமிழிசையிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *