மாற்றுத்திறனாளியின் காலை பிடித்த குலுக்கிய கேரள முதல்வர்: குவியும் பாராட்டு

திருவனந்தபுரம், நவம்பர்-12

தன்னை நேரில் சந்தித்த கையில்லாத மாற்றுதிறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து முதலமைச்சர் பினராயி விஜயன் குலுக்கி வரவேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் என்பவர், முதலமைச்சரின் பொது நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்க திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு சென்றிருந்தார்.

அங்கு முதலமைச்சரை சந்தித்த அவர், தனக்கு ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த ஒரு தொகையை பேரிடர் நிவாரண தொகையாக வழங்கினார். அப்போது இளைஞரின் கால்களை பிடித்து முதலமைச்சர் குலுக்கினார். பின்னர் இளைஞருடன் கலந்துரையாடிய அவர், இளைஞரின் கால் விரல் உதவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.  பிரணவுடனான சந்திப்பை நெகிழ்ச்சி மிகுந்த தருணம் என கூறி முதலமைச்சர் பினராயி விஜயன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. #pinarayivijayan என்ற ஹேஷ்டேக்கில் அந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருவதால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *