மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை!!!

மும்பை, நவம்பர்-12

மகராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பரிந்துரை செய்துள்ளார்.

மகராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல் தனிபெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜ.க. வுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் பா.ஜ.க.  ஆளுநரின் அழைப்பை நிராகரித்தது. இரண்டாவது தனிப்பெரும் கட்சி என்ற முறையில் சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதனால், சிவசேனா காங்கிரஸ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியது. ஆதரவு கடிதங்களை காண்பிக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் சிவசேனா 3 நாட்கள் அவகாசம் கோரியது. இந்த கோரிக்கையை ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நிராகரித்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரசுக்கு இன்றிரவு (12.11.2019) 8.30 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த ஆளுநர் பகத்சிங் கோஷியாரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மகராஷ்டிராவில் எந்த கட்சியுமே நிலையான ஆட்சி அமைக்க இயலாததால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ன் படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *