துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்செலன்ஸ் விருது

சிகாகோ, நவம்பர்-12

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ் பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

அமெரிக்கா சிகாகோவிலுள்ள நெபர்வல்லியில் மெட்ரொபாலிட்டன் பேமிலி சர்வீசஸ் என்ற அமைப்பு சார்பில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் அந்த அமைப்பின் நிறுவனரால் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து சிகாகோ நகரிலுள்ள இந்திய துதகரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றார்.

இதில் இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் ,தமிழக நிதி துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *