உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் ஒன்றுபட்டு செயல்படுவோம்-முத்தரசன்

சென்னை, நவம்பர்-12

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசியதாவது: திமுக சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து வாழ்த்துக்கள் கூறினேன். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கவில்லை, மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வதற்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே உள்ளாட்சி கட்டமைப்புகள் சரியாக இருக்கும், தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் ஒன்றுபட்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயல்படுவோம். இவ்வாறு முத்தரசன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *