சட்டப்பேரவை தேர்தல் வரை கூட்டணியில் மாற்றமில்லை-திருமா

சென்னை, நவம்பர்-12

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

சந்திப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறினேன்.

இந்த கூட்டணி அடுத்த சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரை நீடிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை, எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியோடு தான் எதிர்கொள்வோம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *