வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்-முதல்வர்

சேலம், நவம்பர்-12

நடிகர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் இருக்கிறது என்பது கூட தெரியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் நிகழ்ந்த விபத்து குறித்து இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் காவல்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தன்னாட்சி பெற்ற அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது. கால அவகாசம் குறைவு எனபவதால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்பமனு வாங்கப்படுகிறது.

வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள். திரைப்படங்களில் நடித்து வருவாய் ஈட்டும் வேலையை மட்டும்தான் நடிகர்கள் பார்க்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பதுகூட நடிகர்களுக்குத் தெரியாது.

மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக நடிகர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.  அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாதது ஏன்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது? தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கு வரும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *