உள்ளாட்சி தேர்தல்: எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை

சேலம், நவம்பர்-12

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள அதிமுக கட்சி தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து அதிமுக தரப்ப்பில் வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்ட, அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, அதற்காக செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள், புறநகர் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட, கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *