ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா?- எடப்பாடி பழனிசாமி

கோவை, நவம்பர்-11

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடரும். அதே கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து மாமல்லப்புரத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்பது இடைத்தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. ரஜினி என்ன அரசியல் கட்சித் தலைவரா? அவர் ஒரு நடிகர்? வெற்றிடம் என தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது?. அதிமுகவில் இணைவது குறித்து அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி கடிதம் கொடுத்தால் தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *