ஜார்கண்ட்டில் 2வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

ராஞ்சி.நவம்பர்.11

ஜார்கண்ட்டில்  2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத்  தொகுதிகளுக்கும்  ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 30 ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது கட்டம் டிசம்பர் 7,மூன்றாவது கட்டம் டிசம்பர் 12,  நான்காவது கட்ட தேர்தல் டிசம்பர் 16,  இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 அன்று நடைபெறுகிறது.

 இந்நிலையில்,இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள பஹாரகோரா, காட்ஸிலா, போட்கா, ஜுக்சலை, ஜாம்ஷெட்பூர் கிழக்கு, ஜாம்ஷெட்பூர் மேற்கு, செராகேலா, சாய்பாசா, மஜ்கான், ஜெகநந்த்பூர், மனோகர்பூர், சக்ரதர்பூர், கர்சவன், தாமார், டோர்பா, குந்தி, மந்தர், சிசாய், சிம்டேகா, கோலேபிரா ஆகிய 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.மனுத்தாக்கல் செய்ய வரும்18ம் தேதி கடைசி நாளாகும். 21ம் தேதி வேட்பு மனுக்களை  திரும்பபெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் 15 இடங்கள் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களுக்கானவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *