சுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை, நவம்பர்-11

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயகோபால் மற்றும் மேகநாதன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயகோபாலுக்கு ஏழை நோயாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், அடையாறு புற்றுநோய் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று, மேகநாதன் என்பவருக்கும், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *