உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி அமைத்தே போட்டி-ஸ்டாலின்

சென்னை, நவம்பர்-11

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், வரும் 16ம் தேதி பொதுக் கூட்டங்களை நடத்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ. 14 முதல் 20ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்தே எதிர்கொள்கிறோம். தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. தேர்தலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *